8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் மின்சாரம்; கிருஷ்ணகிரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முயற்சி – திருநங்கைகள் குடியிருப்பில் 2 வீடுகளுக்கு மின் இணைப்பு
கிருஷ்ணகிரி, செப்டம்பர் 4:
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம், கிருஷ்ணகிரி நகரம் பழையபேட்டையில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் திரு. சுரேஷ் அவர்களின் முயற்சியால், இன்று (04.09.2026) இரண்டு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
திருநங்கைகள் குடியிருப்புக்கு நேரில் சென்ற மாவட்டச் செயலாளர்
திருநங்கைகள் அளித்த அழைப்பை ஏற்று, மாவட்டச் செயலாளர் சுரேஷ் அவர்களின் குடியிருப்புக்கு நேரில் சென்று, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது, நீண்ட நாட்களாக குடிநீர் வசதி இல்லாதது, குடியிருப்புக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், தாங்கள் வசித்து வரும் இடத்திற்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, குடிநீர் வசதி செய்து தருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், குடியிருப்புக்கான பட்டா கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்டச் செயலாளர் சுரேஷ் உறுதியளித்தார்.
அடிப்படை வசதிகளுக்காக தொடர்ந்து குரல்
மின்சார இணைப்பு கிடைத்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த திருநங்கைகள், குடிநீர் மற்றும் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் விரைவில் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகளின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் பங்கேற்பு
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத், கிருஷ்ணகிரி நகர நிர்வாகி ஹரி, காவேரிப்பட்டினம் மணி மற்றும் நிர்வாகிகள் வேலன், ஏஜாஸ், சரவணன், ரேணு, அஸ்லாம் பாஷா, சக்தி, வெங்கடேஷ், சூர்யா உள்ளிட்ட கழகத் தோழர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக்குரல்