மருதுபாண்டியர் குருபூஜையில் மரியாதை! அரசுப் பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய தவெக நிர்வாகி என். ரமேஷ்!

மதுரை:

மதுரை மாவட்டம், கண்டுகுளம் கிராமத்தில் மாமன்னன் மருதுபாண்டியரின் 225-ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் திருமங்கலம் தொகுதி அமைப்பாளர் பொறியாளர் என். ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரசுப் பள்ளிக்கு உடனடி உதவி

இதனைத் தொடர்ந்து, கண்டுகுளம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து அப்பகுதி தவெக நிர்வாகிகள், தொகுதி அமைப்பாளர் என். ரமேஷிடம் எடுத்துரைத்து பள்ளிக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, உடனடியாகப் பள்ளிக்குச் சென்ற என். ரமேஷ், மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு மின் விசிறி வசதியையும், உணவு மற்றும் இனிப்புகளையும் வழங்கினார்.

கிராம மக்களுக்கு உதவும் முயற்சி

கிராமப்புற மக்களின் தேவைகளை நேரில் கேட்டறிந்து, இயன்ற உதவிகளை வழங்கி வருவதாகத் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply