மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கிய தவெகவினர்!
திருமங்கலம்:
மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, 2026 அக்டோபர் 27-ஆம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவரக்கோட்டை மற்றும் கண்டுகுளம் பகுதிகளில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கார்த்திக் பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருமங்கலம் நகர நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.
மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், பொதுமக்களுக்கு வெயிலில் தாகம் தணிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக்குரல்