அறுந்து விழுந்த மின்கம்பி! மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு – நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், நெக்குந்தி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி தாக்கியதில் பசுமாடு ஒன்று உயிரிழந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த வேலு மேஸ்திரி என்பவருக்குச் சொந்தமான பசுமாடு, நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, மின்மாற்றியில் இருந்து மின்கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பசுமாட்டைச் சார்ந்து வாழ்வாதாரம் நடத்தி வந்த வேலு மேஸ்திரி குடும்பத்தினர், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவத்தை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply