போதைப்பொருள் பணமோசடி..! ED கண்காணிப்பில் பல வழக்குகள்.

கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து அமலாக்கத்துறை (ED) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ‘ஆபரேஷன் தூஃபான்’ நடவடிக்கையின் கீழ் பதிவான மேலும் பல வழக்குகள் தற்போது ED-யின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, காசர்கோடு மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ள MDMA வழக்கின் விவரங்களை ED அதிகாரிகள் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களின் வங்கிக் கணக்குகள், சொத்து விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

காசர்கோடு MDMA வழக்கு தொடர்பாக 139.29 கிராம் MDMA கைப்பற்றப்பட்ட நிலையில், சர்வதேச போதைப்பொருள் விநியோகத் தொடர்புகள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது, அதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் ED விசாரிக்க உள்ளது.

இதனிடையே, பெரும்பாவூரில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஹைப்ரிட் கஞ்சா வழக்கு மற்றும் கரிப்பூர் MDMA வழக்கிலும் ED ஏற்கனவே சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல வழக்குகள் ED விசாரணையின் கீழ் வரலாம் என கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சர்வதேச வலையமைப்புகள் மற்றும் அதன் நிதி ஆதாரங்களை கண்டறிவதில் ED தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

Leave a Reply