அம்பத்தூரில் தேவர் ஜெயந்தி விழா! 5,000 பேருக்கு அன்னதானம் – மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய எம்.எல்.ஏ. ஜி. பாலமுருகன்!
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் அருகே, 81-வது வார்டு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி. பாலமுருகன் கலந்துகொண்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினார். மேலும், ஏழை, எளிய பொதுமக்கள் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் முன்னெடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்