ஆசிரியர் தினம் வாழ்த்து கவிதை
அ எனும் எழுத்தை ஆரம்பித்த ஆசிரியனே!
பிறந்தநாள் அன்று அ எழுத்து அம்மா என்றேனே!
தமிழ் எழுத்துகள் 247 ஐ கற்றுத்தந்த கல்வியாளனே!
ஆங்கில எழுத்துகள் 26 ஐ கற்றுத் தந்த ஆசானே!
ஒன்று முதல் தொடங்கி எண்களை கற்றுத் தந்த என்னாளனே!
எழுத்துகள் கூட்டித் தந்த கருத்தாளனே!
என் எழுத்தை அறிமுகம் செய்த எழுதுகோலனே!
தேர்வு வைத்து மதிப்பெண் கொடுத்தவனே!
தேர்ச்சி பெற தகுதியைத் தந்தவனே!
சமூகத்தில் தலைநிமிர தகுதியை ஏற்படுத்தியவனே!
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!
உன் புகழ் ஓங்கும் தமிழ் போல் தாங்கும்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்…!
கவிஞர் ஜா. தமீம்
நல்நூலகர்
வந்தவாசி
தமிழக வெற்றிக்குரல்