விஜயா? ராகுலா? — அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன பதில் என்ன?

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விஜய் அல்லது ராகுல் காந்தி ஆகியோரில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக எந்தப் பெயரையும் குறிப்பிடாமல், “இதுகுறித்து முடிவு எடுக்க இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தை இப்போதே விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஊடகங்கள்தான் இந்தக் கேள்வியை பல்வேறு தலைவர்களிடம் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தவெக தலைவர் தளபதி விஜய்யை தேசிய அரசியலுக்கான வலிமையான தலைவராக முன்னிறுத்தும் குரல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

சமீபத்திய அரசியல் விவாதங்களிலும் தவெக தரப்பினர், 2029-ல் தளபதி விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்தைத் தாண்டி தேசிய அரசியலிலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தற்போது அவசர முடிவு தேவையில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது, 2029 அரசியல் களத்தில் தளபதி விஜய்யை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

Leave a Reply