முதலமைச்சர் கோப்பை 2026: வேலூர் – நாமக்கல் மகளிர் கால்பந்து போட்டி தொடக்கம்!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் போட்டியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வேலூர் – நாமக்கல் அணிகளுக்கு இடையேயான மகளிர் கால்பந்து போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்.

தமிழக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்குவதே இப்போட்டிகளின் முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2036 ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு, இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில் தமிழக விளையாட்டு வீரர்களைத் தயார்படுத்தும் நோக்கில் ‘டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ என்ற இலக்குடன் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply