ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு: தவெக ஐடி பிரிவு பெருமிதம்!

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி பிரிவு வரவேற்றுள்ளது.

சமூகநீதித்துறை என்ற பெயர் மாற்றம் வெறும் பெயரளவிலான மாற்றமாக இல்லாமல், உண்மையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தவெக ஐடி விங் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பல்வேறு பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை விவரங்கள்:

  • B.A. – ரூ.1,350-ல் இருந்து ரூ.11,250 ஆக உயர்வு
  • M.A. – ரூ.1,350-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு
  • B.Com., B.Com. (Hons), B.Sc. – ரூ.2,850-ல் இருந்து ரூ.11,250 ஆக உயர்வு
  • B.B.A. – ரூ.4,750-ல் இருந்து ரூ.11,250 ஆக உயர்வு
  • M.Com., M.Sc. – ரூ.2,850-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு

மேலும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான படிப்புகளின் பட்டியலில் புதிதாக 11 பட்டப்படிப்புகள், 10 முதுகலைப் படிப்புகள் மற்றும் 2 பட்டயப் படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சூழல் காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை உயர்வு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.

“கல்வியே சமூகத்திற்கான அடித்தளம்; கல்வி வாய்ப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை” என்ற அடிப்படையில் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள தவெக ஐடி பிரிவு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இது உதவும் என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply