ராந்தம்–இருமரம் சாலையில் பள்ளம்: விபத்து அபாயம்; சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ராந்தம் முதல் இருமரம் செல்லும் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தச் சாலையை தினந்தோறும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக உள்ள இந்தச் சாலையில் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும் சூழலில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தை கவனிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பள்ளத்தில் மழைநீர் தேங்கினால் அதன் ஆழம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ராந்தம்–இருமரம் சாலையை நேரில் ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காலத்தில் பிரச்னை மேலும் தீவிரமடையும் முன்பாக சாலையை சீரமைத்து, பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply