ஆரணி அருகே காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ராணுவ வீரர் மீது புகார்!

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் மது போதையில் காரில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படும் இருவரைப் போலீசார் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, காவல் உதவி ஆய்வாளர் கவிதாவை ராணுவ வீரர் வாசு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளரை ராணுவ வீரர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply