தூசி சுகாதார நிலையத்திற்கு தவெக சார்பில் RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்!
தூசி:
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் எம். உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கழக நிர்வாகி தூசி கே. மோகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூசி ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடகிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். பாரதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூசி ஊராட்சி சார்பில் சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தூசி கே. கௌஷ், விஸ்வராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மேகநாதன், அமீத், ஹரிஹரன், துளசி, ரிஸ்வானா, மாசியா, சுரேஷ், ஹாஜா, தீபக் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தூசி ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டதற்கு அப்பகுதி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்