கலவையில் தீவிரமடைந்த கொசு ஒழிப்பு பணி – மழைக்கால நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பருவமழை காலத்தை முன்னிட்டு, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசு ஒழிப்பு மற்றும் புகை மருந்து தெளிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது நோய் தடுப்பு பணிகளில் ஒன்றாக உள்ளது.
கலவை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நேற்று இரவு கலவை பேருந்து நிலையம், பிரதான கடைவீதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் வாகனம் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்தை தெளித்தனர்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கொசுக்கள் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதால், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இரவு நேரத்திலும் சளைக்காமல் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்