உத்திரமேரூர் எல்லையம்மன் கோயில் திருவிழா: பால்குட ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள்!
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாமரைக்குளக்கரை எல்லையம்மன் ஆலயத்தின் 12ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவின் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள முத்து பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து எல்லையம்மன் ஆலயத்தை அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எல்லையம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவிழாவையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.
12ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார வழிபாடு பக்தர்கள் மத்தியில் சிறப்பு வரவேற்பை பெற்றது.
தமிழக வெற்றிக்குரல்