சுண்டிவாக்கத்தில் சாலையோரம் குவியும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை!

செய்யாறு: திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு அடுத்த சுண்டிவாக்கம் கிராமத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகள் தேங்குவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுண்டிவாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply