17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!
பாண்டியர் காலத்தில் தோன்றி, நாயக்கர் காலத்தில் சிறப்பும் பெருமையும் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில், உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களிலும் பல்வேறு திருக்குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 16 – பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்
செப்டம்பர் 16-ம் தேதி மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்கள் மற்றும் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 17 – மகா கும்பாபிஷேகம்
முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் கோபுரங்களுக்கான மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்களுக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகம், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாற்றில் முக்கிய ஆன்மிக நிகழ்வாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்