மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: மதுரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை கோரிக்கை!
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (17ஆம் தேதி) நடைபெற உள்ள நிலையில், விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை நீதிமன்றத்தில் நேற்று காலை தலைமை நீதிபதி வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது வழக்கறிஞர் கே.கே. ரமேஷ், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் முறையிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பான முடிவு நிர்வாக ரீதியாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல மனுவாக தாக்கல் செய்தால், அதனை முறையாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனால், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும் விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்