ஆரணியில் பெரியார் பிறந்தநாள் விழா! திருவுருவச் சிலைக்கு தவெக நிர்வாகிகள் மரியாதை.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சத்யா கலந்து கொண்டு, தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்ற நிர்வாகிகள் தந்தை பெரியாரின் கொள்கைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்