இளநகரில் புதிய துணை சுகாதார மையம் திறப்பு! அமைச்சர் தென்னரசு, எம்.எல்.ஏ. முனிரத்தினம் பங்கேற்பு.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், இளநகர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், மாவட்ட ஆட்சியர் சினேகா ஆகியோர் கலந்து கொண்டு துணை சுகாதார மையத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் தென்னரசு உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
நிகழ்வில் அரசு அலுவலர்கள், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார், இளநகர் நிர்வாகி மாரிமுத்து பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய துணை சுகாதார மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், இளநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது அடிப்படை மருத்துவ தேவைகளை உள்ளூரிலேயே பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்