காதணி விழாவில் வெடி வெடித்ததில் திடீர் தீ! மண்டபம் அருகே பேனர்களில் பற்றிய தீ.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சீர்வரிசை பொருட்களை எடுத்துச் செல்லும் போது வெடி வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வெடியில் இருந்து சிதறிய தீப்பொறிகள், மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களில் விழுந்ததில் அவற்றில் திடீரென தீப்பற்றியது.
இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதுடன், பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது.
தமிழக வெற்றிக்குரல்