விடுமுறையிலும் வாசிப்பை தொடருங்கள்! சி.ம. புதூர் பள்ளி மாணவர்களுக்கு நூலகத்தின் அழைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அருகிலுள்ள சி.ம. புதூர் கிளை நூலகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய கிளை நூலகர் ஜா. தமீம், நூலகத்தில் சிறுவர்களுக்கான பல்வேறு வகையான புத்தகங்கள், சிறுவர் இதழ்கள் மற்றும் அறிவை வளர்க்கும் நூல்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், விடுமுறை நாட்களில் மாணவர்கள் நூலகத்திற்கு வந்து புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தங்களது அறிவையும் திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.
மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்த அவர், தினமும் நூலகத்தைப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர். நம்பெருமாள், உதவி ஆசிரியை த. பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக்குரல்