90-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளுடன் வரலாற்றுச் சின்னம்: பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோவிலை பாதுகாக்க கோரிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரமௌலீஸ்வரர் கோவிலை முறையாக பராமரித்து, பாதுகாத்து, முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழர் கால வரலாற்றுடன் தொடர்புடைய பிரம்மதேசம்
பிரம்மதேசம் பகுதி சோழர் கால வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவில் வளாகத்தில் பல்வேறு காலங்களைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கல்வெட்டுகள் மூலம் அக்காலத்தில் நடைபெற்ற நிர்வாக நடைமுறைகள், நிலதானங்கள், மடங்கள், கோவில் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ராஜேந்திர சோழர் கால கல்வெட்டுகள்
பிரம்மதேசம் பகுதி முதலாம் ராஜேந்திர சோழரின் காலத்துடனும் தொடர்புடையதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ராஜேந்திர சோழருக்குப் பின்னர் அவரது தேவியார் வீரமகாதேவியார் தொடர்பான நிகழ்வை குறிப்பிடும் கல்வெட்டு உள்ளிட்ட முக்கிய வரலாற்றுச் சான்றுகள் கோவில் பகுதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் பழமையான கட்டிடக்கலைச் சின்னங்கள் வரலாற்று ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பழமையான கட்டிடக்கலையை பாதுகாக்க கோரிக்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை மீண்டும் முறையாக பராமரித்து, பழமையான கட்டிடக்கலை மற்றும் சிற்பங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவில் வளாகத்தை சீரமைத்து, சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும்
கோவிலின் வரலாற்றுச் சிறப்புகளை பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அறிந்து கொள்ளும் வகையில் உரிய தகவல் பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோவிலை முக்கிய வரலாற்று மற்றும் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரம்மதேசத்தின் வரலாற்றுப் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில், கோவிலை முறையாக பராமரித்து பாதுகாப்பது அவசியம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
“வரலாற்றை பாதுகாப்போம்… பிரம்மதேசத்தின் பெருமையை உலகறியச் செய்வோம்!” என்ற எதிர்பார்ப்புடன் அரசின் நடவடிக்கையை அப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்