காந்தி வேடமணிந்து காந்திய சிந்தனை நூல்களை வாசித்த இளம் வாசகர் – நூலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள சி.ம. புதூர் கிளை நூலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நூலகத்தின் இளம் வாசகரான ம. நவீன் சாய், மகாத்மா காந்தி வேடமணிந்து, காந்திய சிந்தனைகள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்களை வாசித்தார்.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், மகாத்மா காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறையை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காந்தி வேடமணிந்து ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்த இளம் வாசகர் ம. நவீன் சாயை, நல்நூலகர் ஜா. தமீம் பாராட்டி, பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வு, இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதோடு, தேசிய தலைவர்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக்குரல்