சாலவாக்கம் லயன் சங்க புதிய தலைவராக மூவேந்தன் தேர்வு – புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

காஞ்சிபுரம், செப். 2:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் லயன் சங்கத்தின் புதிய தலைவராக மூவேந்தன் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

பன்னாட்டு லயன் சங்கத்தின் சாலவாக்கம் மண்டல புதிய சங்க நிர்வாகிகள் தேர்வு மற்றும் பதவியேற்பு விழா சாலவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் சாலவாக்கம் லயன் சங்கத்தின் தலைவராக மூவேந்தன் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பதவியேற்ற புதிய தலைவருக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சங்கத்தின் செயலாளராக ராகுலும், பொருளாளராக ஹம்துவும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டு, சங்க நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் லயன் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave a Reply