திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு!

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து, நவம்பர் 24ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க், வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பிரவீன் குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய், கோயில் இணை ஆணையர் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply