பெருங்கட்டூரில் களைகட்டிய கபடி போட்டி! வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது.
வெம்பாக்கம், செப். 2:
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம் பெருங்கட்டூர் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆர்வத்துடன் பங்கேற்ற கபடி வீரர்கள்
பெருங்கட்டூர் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடிய நிலையில், போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் திரண்டிருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் தென்மேற்கு ஒன்றிய செயலாளர் R. சுரேஷ் பாபு கலந்து கொண்டு, போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், வெம்பாக்கம் தென்மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் K. பாபு, மூன்றாம் பரிசாக ரூ.7,000 வழங்கினார்.
அதேபோல், கிளைச் செயலாளர் பாண்டுரங்கன், நான்காம் பரிசாக ரூ.5,000 வழங்கினார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வம்
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கபடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்
good