தேனியில் ரூ.26.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! 1,960 பயனாளிகளுக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வழங்கினார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் நடைபெற்ற விழாவில், 1,960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வழங்கினார்.

ரூ.2.82 கோடியில் கட்டப்பட்ட 3 பள்ளிகள் திறப்பு

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட மூன்று பள்ளிக் கட்டடங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள்

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, மாவட்ட அளவிலான அரசு நலத்திட்ட நிகழ்வாக நடைபெற்றது.

Leave a Reply