பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற ஜெஹான் டொரப் மதன்! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்.
ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
வீரர் ஜெஹான் டொரப் மதனின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இளம் பாரா விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம்
ஜெஹான் டொரப் மதன் வென்றுள்ள பதக்கம் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வெற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும் புதிய உத்வேகத்தையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று, விளையாட்டுத் துறையில் மேலும் பல உயரங்களை எட்ட வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு முதல்வர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்