தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடம்! ரோல் பால் போட்டியில் தர்மபுரி மாணவர்கள் சாதனை.

தர்மபுரி:

தஞ்சாவூரில் நடைபெற்ற சூப்பர் மினி தமிழ்நாடு ஓபன் ரோல் பால் சாம்பியன்ஷிப் 2026–27 போட்டியில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடம் பிடித்து மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

2026 அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

ஷாவ்லின் அகாடமி மாணவர்கள் சாதனை

தர்மபுரியில் செயல்பட்டு வரும் SHAOLIN Sports Academy-யில் பயிற்சி பெற்ற 9 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்று, தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.

மாணவர்களின் இந்தச் சாதனைக்கு ஷாவ்லின் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்களான சத்திய உதய மூர்த்தி மற்றும் அன்பரசு பாலா ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தர்மபுரி மாவட்ட ரோல் பால் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சிறு வயதிலேயே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களின் வெற்றி, தர்மபுரி மாவட்ட விளையாட்டுத் துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply