முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற ஆவடி மாணவி! ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர் – ஆவடி:
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற ஆவடி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்குச் சொந்த ஊர் திரும்பியபோது ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற பூசிக்கா சாய்!
கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில், ஆவடியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி பூசிக்கா சாய் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும், கராத்தே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ஆவடி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
ஆவடி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்குப் பண மாலைகள் அணிவித்தும், கிரீடம் சூட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தேசியப் போட்டியில் பங்கேற்கத் தயாராகும் மாணவி!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணவி பூசிக்கா சாய், கோவையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் குத்துச்சண்டை விளையாட்டைச் சேர்த்ததற்காகத் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், ஒடிசாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருவதாகக் கூறினார். கோவையில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்குரல்