பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவி! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்.
ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பேபி சஹானா ரவியின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இளம் பாரா விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம்
வீராங்கனை பேபி சஹானா ரவி தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாக முதல்வர் பாராட்டியுள்ளார். அவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்திலும் பல்வேறு வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வீராங்கனைக்கு முதல்வர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்