திருவண்ணாமலை மாவட்டத்தில் த.வெ.க சார்பில் இலவச கணினிப் பயிற்சி தொடக்கம்!
தெள்ளார்: திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தளபதி விஜய் பயிலகம் மற்றும் பத்மா கணினிப் பயிற்சி மையம் இணைந்து, அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான இலவச கணினிப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
கடந்த 20.10.2026, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், தெள்ளாரில் உள்ள புதுமா டிஜிட்டல் மையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்
இலவச கணினிப் பயிற்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளர் எம். உதயகுமார், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கணினி அறிவை மேம்படுத்துவதற்கும் இத்தகைய பயிற்சிகள் உதவும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் பயிற்சிக்காக நன்கொடை வழங்கிய மாவட்ட இணைச் செயலாளர் ஆர். கார்த்தி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் முயற்சி
மாவட்ட ஊடகப் பிரிவு துணை அமைப்பாளரும், பத்மா டிஜிட்டல் மற்றும் கணினிப் பயிற்சி மையத்தின் நிர்வாகியுமான எஸ். மதன்ராஜ், பி.ஏ., டி.எம்.டி. ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்கில் இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சித் திட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்