உசிலம்பட்டி பூ, காய்கறி சந்தையில் எம்.எல்.ஏ. விஜய் மகாலிங்கம் ஆய்வு! கழிவுநீரை உடனடியாக அகற்ற உத்தரவு!

பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் – விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பூ மற்றும் காய்கறி சந்தைப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சந்தைப் பகுதியில் தேங்கியிருந்த கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாக ஊழியர்களிடம் அவர் வலியுறுத்தினார். சந்தைப் பகுதியில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்து, பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளைச் சட்டமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த விஜய் மகாலிங்கம், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Leave a Reply