செக்கானூரணியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா!
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட செக்கானூரணி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
மாண்புமிகு மின்சக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜய் மகாலிங்கம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.வி. கருப்பையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், தொண்டரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
செக்கானூரணி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்குப் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்குப் பேருந்து போக்குவரத்து தொடர்பான வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்