நடைபெற உள்ள ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி பெறுவது நிச்சயம் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் அறிக்கை.

5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்கள் போட்டியிட்டாலும்
த.வெ.க வெல்வது நிச்சயம்
தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் அறிக்கை!

தமிழ்நாடு அரசியல் களத்தில் முதல்- அமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய்யின் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் கைகோர்க்கத் தொடங்கினாலும் வீழ்த்த முடியாதென த.வெ.க பிரமுகரும் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவருமான ஜெமினி எம்.என் ராதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசியல் களத்தில் முதல்- அமைச்சரும் த.வெ.க தலைவருமான ச.ஜோசப் விஜய்யின் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் கைகோர்க்கத் தொடங்கியுள்ளன .

கொள்கை ரீதியாக எப்போதுமே எதிரெதிர் துருவங்களாக இயங்கும் கட்சிகள் கூட, த.வெ.கவின் நேர்மையான மற்றும் துணிச்சலான அரசியல் பயணத்தை எதிர்கொள்ள முடியாமல்
. பொது வேட்பாளர் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் இந்த நாடகங்களை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
வரவிருக்கும் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய
5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் தனித்தனியாகப் போட்டியிட்டு விஜய்யை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த திமுக, அதிமுக, பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஒரே வியூகத்தின் கீழ் ஒன்று சேர்ந்து, பொது வேட்பாளர்களை நிறுத்தினாலும்
மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக இந்தத் தற்காலிகக் கூட்டணிகள் அனைத்தும் தோல்வி அடைவது நிச்சயம்

நடைபெற உள்ள திருச்சி கிழக்கு ,விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில்
மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் சார்பில் போட்டிடுகின்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி..

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply