மதுரையில் “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் ஆய்வு!

மதுரை:

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மதுரையில் நடைபெற்ற மூன்றாவது மண்டல மாநாட்டில், ஊரக வளர்ச்சிப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

“வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற இந்த மாநாட்டில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply