சிஎம்ஆர்எல்–எக்ஸாலஜிக் வழக்கு: விசாரணைக்கு 4 வாரங்கள் தடை; சட்டத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக பினராயி விஜயன் கருத்து!

கேரளா: சிஎம்ஆர்எல்–எக்ஸாலஜிக் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு நான்கு வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் சட்ட அமைப்பின் மீது அனைத்து நிலைகளிலும் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார். சட்டம் அதன் வழியில் செயல்படும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு, சட்டம் அதன் வழியில் செயல்படும் என்ற தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

Leave a Reply