மருதுபாண்டியர் குருபூஜை: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, இனிப்பு வழங்கிய தவெகவினர்!

மதுரை: மாமன்னன் மருதுபாண்டியரின் 225-ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாவட்டம், சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் திருமங்கலம் தொகுதி அமைப்பாளர் பொறியாளர் என். ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

இதனைத் தொடர்ந்து, சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு நேரில் சென்ற என். ரமேஷ், அங்குள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இலவசச் சீருடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

மாணவர்களின் கல்வி மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்த உதவி நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் பொறியாளர் என். ரமேஷுக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தவெக நிர்வாகிகள் பங்கேற்பு

மாமன்னன் மருதுபாண்டியரின் நினைவைப் போற்றும் வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply