கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் பங்கேற்பு!
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது தேவர் ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்