தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்! கூடுதல் டிஜிபி அன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

மதுரை: வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் டி.எஸ். அன்பு, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

இந்தக் கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர், தென்மண்டல காவல்துறைத் தலைவர், மதுரை சரக காவல்துறைத் துணைத் தலைவர் மற்றும் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேவர் ஜெயந்தி விழாவின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், விழாவில் பங்கேற்க வருகை தரும் முக்கியத் தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

விழா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

Leave a Reply