தேன்கனிக்கோட்டை–பஞ்சப்பள்ளி சாலையில் மின்விபத்து அபாயம்! பேருந்து நிறுத்தத்தில் புதர்கள் மண்டியதால் பொதுமக்கள் அச்சம்!

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை–பஞ்சப்பள்ளி சாலையில், செக்போஸ்ட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மின்மாற்றியைச் சுற்றிப் புதர்களும் மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேருந்துக்காகக் காத்திருப்போர் அச்சம்

இந்த இடத்தில் பேருந்துகள் நின்று செல்வதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்மாற்றியைச் சுற்றி செடிகள் மற்றும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதுடன், மழைநீரும் தேங்கி நிற்பதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பேருந்து நிறுத்தத்தில் நிலவும் இந்தச் சூழலால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகப் புதர்களை அகற்றி, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதுடன், மின்மாற்றியைச் சுற்றியுள்ள பகுதியைப் பாதுகாப்பாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply