திருக்கோவிலூரில் உறியடி உத்ஸவம் கோலாகலம்..!

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ த்ரிவிக்ரம ஸ்வாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி ஜெயந்தி மஹோத்ஸவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று காலை முத்துப்பந்தலில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு உறியடி உத்ஸவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

உபயதாரர்களான S.K.T.C. ஸ்ரீமான் K. அசோகன் & பிரதர்ஸ் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

இதில் திருக்கோவிலூர் யாதவர் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாட்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply