ரங்கப்பனூரில் கிராம சபைக் கூட்டம்: வரவு-செலவு கணக்குகள் வாசிப்பு; பொதுமக்கள் உறுதிமொழி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புற வளாகத்தில் இன்று (02.10.2026) காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.எம்.எஸ்.கே. அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்து, சுகாதாரமான முறையில் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ரங்கப்பனூர் ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டன. ஊராட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கிராம சபைக் கூட்டத்தின் நிறைவாக, பொதுமக்கள் அனைவரும் சுகாதாரம், தூய்மை மற்றும் குடிநீர் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பொறுப்புகளை கடைப்பிடிப்பது தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply