தெள்ளாறில் தவெக கிளை பெயர் பலகை திறப்பு..! உதயகுமார் பங்கேற்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், தெள்ளாறு தென்மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேனல் மற்றும் பென்னாட்டகரம் கிராமங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிளை போர்டு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தவெக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் M. உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கழகத்தின் கிளை பெயர் பலகைகளை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், பொதுமக்களுடன் தவெக நிர்வாகிகள் கலந்துரையாடி, தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் எதிர்கால களப்பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கிராமப்புற அளவில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களின் பங்கேற்பும் ஆதரவும் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகம் மாவட்டம் வாரியாக மக்கள் நலச் செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அதன் அதிகாரப்பூர்வ தளம் குறிப்பிடுகிறது.
தமிழக வெற்றிக்குரல்