தெள்ளார் கோதண்டராமர் கோயிலில் உறியடி விழா..! கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெள்ளார் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலில் உறியடி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்மிகு கோதண்டராமர் சுவாமிக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலாவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலாவின் போது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர்.
உறியடி விழாவை முன்னிட்டு தெள்ளார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆன்மிக உற்சாகம் நிலவியது.
தமிழக வெற்றிக்குரல்