அம்பலூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம்.
நாட்றம்பள்ளி, அக். 3:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், அம்பலூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சத்தி ராஜா செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் அம்பலூர் ஊராட்சியின் அடிப்படை வசதிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பொதுமக்களின் தேவைகள் மற்றும் ஊராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக்குரல்