அம்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்: 100 தூய்மைப் பணியாளர்களுக்கு புடவைகள், 500 பேருக்கு அன்னதானம்!

சென்னை: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் 85-வது வட்டம் காமராஜபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி. பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் மகப்பேறு மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, சித்த மருத்துவ ஆலோசனை, குழந்தைகள் நல ஆலோசனை, கண் பார்வைப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், உடல்நலக் குறைபாடுகள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள்

முகாமின் ஒரு பகுதியாக, 100 தூய்மைப் பணியாளர்களுக்குப் புடவைகள் வழங்கப்பட்டன. மேலும், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கண் பரிசோதனை மேற்கொண்டவர்களில் தேவையானவர்களுக்கு இலவசமாகக் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் மற்றும் பிற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply