அம்பத்தூர் அரசு மருத்துவமனையில் 10 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் – எம்.எல்.ஏ. ஜி. பாலமுருகன் வழங்கினார்.
சென்னை: சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடி மஞ்சக்குப்பம் அரசு மருத்துவமனையில், தமிழக முதல்வரின் “தாய்மாமன் தங்க மோதிரம்” வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி. பாலமுருகன் கலந்து கொண்டு, அரசு மருத்துவமனையில் பிறந்த 10 பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரங்களை வழங்கினார்.
குழந்தைகளின் பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மஞ்சக்குப்பம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்ட நிகழ்வு பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக்குரல்