ஆசிய விளையாட்டில் வெண்கலம்: தமிழக வீரர்கள் விஷால், ராஜேஷுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை!
ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வீரர்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் குழு ஒருங்கிணைப்பு ஆகியவை வெற்றியை நோக்கிப் பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்திலும் தடகள வீரர்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்